தென் மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவர்களிடையே சாதிய மோதல் நடைபெறுவதை தடுக்க பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது. கடந்த ஆண்டு மாணவன் சின்னதுரை தாக்கப்பட்டதை போல இந்த ஆண்டு மோதல் தொடர்கிறது. இதனால் காவல்துறையும் கல்வித்துறையும் இணைந்து பள்ளிகளில் அமைதி குழு அமைக்க முடிவு செய்துள்ளது. அத்துடன் குறிப்பிட்ட பள்ளிகளில் ஆசிரியர்களை கூண்டோடு மாற்றவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.