குஜராத், வதோராவில் உள்ள தனியார் பள்ளியின் முதல் மாடி வகுப்பறை சுவர் இடிந்து விழும் பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில், மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்திருந்தபோது, திடீரென்று சுவர் இடிந்ததில் 5க்கும் மேற்பட்ட மாணவர்கள் கீழே விழுந்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள், ஆசிரியர்கள் பதறினர். இச்சம்பவம் குறித்து அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறை, அவர்களை பத்திரமாக மீட்டது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.