கதுவா தீவிரவாதத் தாக்குதலுக்கு இந்தியா உரிய பதிலடி கொடுக்கும் என பாதுகாப்புத்துறை செயலாளர் கிரிதர் அரமனே உறுதியளித்துள்ளார். டெல்லியில் பேசிய அவர், தேசத்தைக் காக்கும் பணியின்போது, வீரமரணம் அடைந்த 5 தியாகிகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் தியாகம் என்றும் நினைவுகூரப்படும். இந்த தாக்குதலுக்கு காரணமான தீய சக்திகள் பழிதீர்க்கப்படுவர் எனக் கூறியுள்ளார்