உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ்-2024 போட்டியில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் லெஜெண்ட்ஸ் வீரர் மிஸ்பா உல் ஹக் தொடை தசை வலியால் அவதிப்பட்டார். அதைப் பார்த்த இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ராபின் உத்தப்பா ஓடிச்சென்று அவருக்கு உதவினார். நடக்க முடியாமல் கஷ்டப்பட்ட அவரை கைத்தாங்கலாக அழைத்துச் சென்றார். அந்த வீடியோ வைரலாகிவரும் நிலையில், நெட்டிசன்கள் உத்தப்பாவை பாராட்டி வருகின்றனர். இந்த இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் ஆனது குறிப்பிடத்தக்கது.