பாக்கெட்டில் கை வைத்துக்கொண்டால் மட்டுமே வெற்றி உங்களை தேடி வராது என்று பாரிஸ் ஒலிம்பிக்கில் Casualஆக பாக்கெட்டில் கைவைத்துக்கொண்டே துப்பாக்கிச்சுடுதலில் வெள்ளி வென்ற துருக்கி வீரர் யூசுஃப் டெயிக் தெரிவித்துள்ளார். மேலும் அவர், நான் ஒரு யதார்த்த வீரர். எனக்கு எப்போதும் பாதுகாப்பு உபகரணங்கள் தேவைப்பட்டதில்லை. நான் துப்பாக்கியை கையாளும் விதம் உலகிலேயே மிகவும் அரிதானது. நான் இரண்டு கண்களையும் திறந்து கொண்டுதான் சுடுவேன். நடுவர்களே இதைக் கண்டு ஆச்சர்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.