தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பாஜக குறித்து பேசுகையில், 2004 முதல் 2014 வரை நடைபெற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலம் இந்தியாவின் பொற்காலம் என்று பொருளாதார வல்லுநர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அந்த 10 ஆண்டு ஆட்சிக்காலத்தில், தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் அதிகரித்தது. அது போன்ற வளர்ச்சியை 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் நெருங்கக் கூட முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.