விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வெற்றிக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே அதிமுக தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார். பாஜக மற்றும் பாமகவின் பி டீம் ஆக திமுக செயல்படுவதாக குற்றம் சாட்டிய அவர், எத்தகைய முயற்சி எடுத்தாலும் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது என தெரிவித்தார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்த நிலையில் திமுக மற்றும் பாமக இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.