திருச்சி லால்குடி தொகுதி எம்எல்ஏ சௌந்தரபாண்டியனுக்கும் அமைச்சர் நேருவுக்கும் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. அரசு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து அவரை நேரு புறக்கணித்து வருகின்றார். இதனால் கட்சி தலைமை மீது அதிருப்தியில் உள்ள அவர், மாற்று முகாமுக்கு செல்லும் யோசனையில் உள்ளதாக தகவல் கூறுகின்றன. இதனை அறிந்த பாஜக தரப்பு அவரை தங்கள் பக்கம் இழுக்க தூது அனுப்பியதாக கூறப்படுகிறது.