டெல்லி ஆம் ஆத்மி அரசின் அமைச்சரவையில் சமூக நலன் மற்றும் தொழிலாளர் துறை உள்ளிட்ட ஏழு துறைகளில் அமைச்சராக இருந்த ராஜ்குமார் ஆனந்திடம் 2023 ஆம் ஆண்டு ED 20 மணி நேரம் விசாரணை நடத்தியது. இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதத்தில் அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதனால் பாஜக அவரை அமலாக்க துறையை கொண்டு மிரட்டுவதாக AAP குற்றம் சாட்டியது. இந்நிலையில் அவர் கட்சியிலிருந்து விலகி மனைவி வீணாவுடன் பாஜகவில் இணைந்துள்ளார்.