பாஜக ஆட்சியில் அந்த கட்சியை சேர்ந்த தலைவர்களே அச்சத்தில் உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவையில் எம்பி ராகுல் பேசும்போது, பாஜகவில் ஒருவர் மட்டுமே பிரதமராக வர முடியும் என மோடியை விமர்சித்த அவர், ராஜ்நாத் சிங் பிரதமராக வர முயற்சித்தால் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றார். இந்திய மக்கள் அனைத்து விஷயங்களிலும் ஒருவித அச்சத்திலேயே வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.