ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற விடக்கூடாது என்று சுனிதா கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் அரசியலை மாற்றிய ஹரியானாவின் மகனான அரவிந்த் கெஜ்ரிவாலை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பிரதமர் மோடி சிறையில் அடைத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டிய அவர், டெல்லி & பஞ்சாப்பில் ஏற்பட்ட வளர்ச்சியும், மாற்றமும் ஹரியானாவில் உருவாவதை தடுக்க பாஜக சதி செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.