நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நாளில் பாஜக அரசின் வஞ்சனையால், நீதி கேட்டு மக்கள் மன்றத்தில் நிற்கிறேன் என \முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு மாநில மக்கள் பாஜகவை புறக்கணித்தார்கள். அந்த மாநில மக்களை பழிவாங்கும் பட்ஜெட் தான் இது. மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையால் மக்கள் மன்றத்தில் நிற்கிறேன் என்று கூறியுள்ளார்.