பாஜக அரசு கவிழ்வதை பார்க்க நாட்டு மக்கள் பொறுமையுடன் காத்திருக்கிறார்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா கூறியுள்ளார். மக்களவையில் உரையாற்றிய அவர், கடந்தாண்டு, மஹுவா, நீ நிறைய இழந்துவிட்டாய், உன்னுடைய பதவியை இழந்துவிட்டாய், வீட்டை இழந்துவிட்டாய்’ என்று என்னிடம் பலர் கூறினார்கள். ஒரு அறுவை சிகிச்சையில் என்னுடைய கர்ப்பப்பையையும் இழந்துவிட்டேன். ஆனால், நான் எதை பெற்றேன் என்று தெரியுமா? பயத்தில் இருந்து விடுதலை பெற்றேன். உங்களை கண்டு நான் பயப்படமாட்டேன். பாஜக அரசு கவிழ்வதை பார்க்க நாட்டு மக்கள் பொறுமையுடன் காத்திருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.