கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் ரூ.300 கோடி ஊழல் நடந்ததாக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். பாஜக தலைவர்கள் குறித்து பேசிய அவர், ஊழலின் தந்தை என்று விமர்சித்தார். எடியூரப்பா, பசவராஜு பொம்மை தலைமையிலான ஆட்சிக் காலத்தில் இந்த ஊழல்கள் நடந்ததாகவும், அவை குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் சிவக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த முறைகேடு குறித்த அனைத்து விவரங்களும் சட்டசபையில் வெளியிடப்படவுள்ளது.