ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜக தயாரித்த பட்ஜெட் என சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். பாஜக தனது ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள பிஹார், ஆந்திராவுக்கு சிறப்பு நிதி அளித்துள்ளதாக கூறிய அவர், ஆட்சிக்கு வருவதற்கு வாக்களித்த சாதாரண மக்களுக்கு மூன்றாவது முறையாக பாஜக வஞ்சனை புரிந்துள்ளது என்றார். வழக்கம் போலவே கார்ப்பரேட்டுகளை மகிழ்விக்கும் பட்ஜெட்டாக இருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.