இடைத்தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிரான நிலை உள்ளதை வெளிப்படுத்துகிறது என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மக்கள் விரோத பாஜக அரசுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நடைபெற்ற 13 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 10 இடங்களில் பாஜக கூட்டணி தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக, மே.வங்கத்தில் 4 தொகுதிகளிலும் மம்தா கட்சி வென்றது.