இந்தியாவில் பாஜக தொடர்ந்து பதவியில் இருப்பதற்கான காப்பீடுதான் இந்த பட்ஜெட் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் விமர்சித்துள்ளார். 2024- 2025 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள பீட்டர் அல்போன்ஸ், நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடுவை சந்தோஷப்படுத்தப் பார்க்கின்றனர். தமிழ்நாட்டின் வயிற்றில் அடித்துவிட்டு ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கு அள்ளி கொடுத்துள்ளனர் என்று கூறியுள்ளார்.