பின்னணி பாடகி உஷா உதூப்பின் கணவன் ஜானி சாக்கோ (78), மாரடைப்பால் காலமானார். கொல்கத்தாவில் உள்ள வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். ஊருக்காக உழைப்பவன், இதயக்கனி, சிவலிங்கா போன்ற படங்களில் பாடியுள்ள உஷா உதூப் சென்னையில் பிறந்து இந்திய திரையுலகின் பின்னணி பாடகியாக ஜொலித்து வருவது குறிப்பிடத்தக்கது.