டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். முதுகுவலியால் அவதிப்பட்ட அவர், 2 நாள்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த அவருக்கு, உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால், அவரது உடல்நிலை சீரடைந்ததால் தற்போது அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.