பானிபூரியில் காரம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக பச்சை மிளகாய்களை பச்சையாக அரைத்து அதை புளி, உப்புடன் சேர்த்து பானி என்கிற ரசம் தயாரிக்கப்படுகிறது. இதை ஒருவர் அதிகமாக உட்கொள்ளும் பொழுது அது வயிறு மற்றும் குடல் பகுதிகளில் புண்களை ஏற்படுத்தலாம். அளவுக்கு மீறிய காரம் ஒரு கட்டத்தில் அதிகமாகும் பட்சத்தில், அது புற்றுநோயாக கூட மாற வாய்ப்பிருக்கிறது. தற்போது பானி பூரியில் பச்சை நிறத்திற்காக கெமிக்கல் டை கலக்கப்படுவது தெரியவந்துள்ளது. இதுவும் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும் என உணவு பாதுகாப்புத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.