பாபர் அசாம் இடத்தில் தான் இருந்தால் கேப்டன் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் மாலிக் தெரிவித்துள்ளார். பாபர் அசாமுக்கு கேப்டனாக அணியை வழி நடத்தும் திறன் இல்லை என்ற அவர், கேப்டன் பொறுப்பு அவரின் இயல்பான ஆட்டத்தையும் பாதித்துள்ளது என்றார். பாகிஸ்தான் அணி டி20 உலக கோப்பையில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாததால் பாபர் அசாமை பலரும் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.