பாமகவின் பொய் பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை. பாமகவுக்கு விக்கிரவாண்டி மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளார்கள் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி குறித்து கருத்து பேசியுள்ள அமைச்சர் பொன்முடி, அதிமுக தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் அவர்களுக்கும் சேர்ந்துதான் தோல்வி கிடைத்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் பேச்சை அதிமுகவினரே கேட்பதில்லை என்பதற்கு விக்கிரவாண்டி தேர்தலே உதாரணம் என்று விமர்சித்துள்ளார்.