வருகின்ற ஜூலை 10ம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது. இந்த நிலையில் அதிமுக வாக்குகளை பெற பாமகவும் நாம் தமிழரும் போட்டி போட்டுக் கொண்டு முயற்சி செய்து வருகின்றன.
இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேர்தல் புறக்கணிப்பு என்ற நிலைப்பாட்டை அதிமுகவினர் கண்டிப்புடன் கடைபிடிக்க இபிஎஸ் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விழுப்புரம் மாவட்ட செயலாளர் தொடங்கி கிளைச் செயலாளர்கள் வரை அனைவரையும் தொலைபேசியில் அழைத்து அவர் பேசிய அவர், இடைத்தேர்தலில் பாமக வேட்பாளருக்கு அதிமுகவினர் வாக்களிக்கக் கூடாது என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.