பாமக மீது குறை கூற திமுகவுக்கு தகுதி இல்லை என அன்புமணி தெரிவித்துள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று முதல்வர் கூறுவது அப்பட்டமான பொய் என்று விமர்சித்த அவர், உயர் பதவிகளில் இருப்பவர்கள் மக்களிடம் தவறான தகவல்களை கூறுவது அந்த பதவிக்கு அழகல்ல என்றார். தேர்தல் காலங்களில் மட்டுமே சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பாமக பேசுவதாக கூறுவது தவறானது என்றார்.