விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வெற்றி பெற்றால் அடுத்த மாதமே 10.5% இட ஒதுக்கீடு கிடைக்கும் என்று அன்புமணி ராமதாஸ் உறுதி அளித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதியில் பாமக வேட்பாளர் சி. அன்புமணியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக பண பலத்தை மட்டுமே நம்பி களம் காண்கிறது என்றார். பணம் வாங்கி விட்டோமே என்பதற்காக யாரும் திமுகவிற்கு வாக்களிக்காதீர்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.