தமிழகத்தில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பை கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசு ஒப்பந்தம் கூறியுள்ளது. ரேஷன் கடைகள் மூலமாக ஏழைகளுக்கு மாதந்தோறும் இலவச அரிசி, பருப்பு, பாமாயில் மற்றும் சர்க்கரை ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மக்களுக்கு தடை இன்றி கிடைக்க ஏதுவாக டெண்டர் கோரி உள்ளதால் அடுத்த இரண்டு மாதத்திற்கு ரேஷன் பொருட்கள் தடையின்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயிலுக்கு தட்டுப்பாடு நிலவியது.