பாம்பு கடியால் ஆண்டுக்கு 50,000 பேர் உயிரிழப்பதாக பாஜக எம்.பி.,யும், முன்னாள் இணையமைச்சருமான ராஜீவ் பிரதாப்ருதி மக்களவையில் நேற்று தெரிவித்தார். உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் இந்த வகை மரணங்கள் அதிகமாக ஏற்படுகிறது. நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 30 முதல் 40 லட்சம் பேர் பாம்புக்கடியால் பாதிக்கப்படுவதாக அவர் கவலை தெரிவித்தார். பருவநிலை மாற்றம் பாம்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளது.