பார்முலா கார் பந்தயம் நடத்துவது குறித்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், சென்னையில் 2 ஆண்டுகளுக்கு பார்முலா கார் பந்தயம் நடத்த மாட்டோம் என்று நீதிமன்றத்தில் உறுதி பத்திரம் கொடுத்துவிட்டு கார் பந்தயத்தை நடத்த முயற்சிக்கின்றனர். திமுக அரசின் இந்த நிர்பந்தத்தால் பல்வேறு தொழில் அமைப்புகள் கொதிப்படைந்துள்ளன. அதிகாரத்தை பயன்படுத்தி பார்முலா கார் பந்தயம் நடத்த ஸ்பான்சர்ஷிப்புக்கு வற்புத்தல் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.