கர்நாடக மாநிலம் உப்பினங்கடி கிராமத்தைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் கடந்த 16ஆம் தேதி இரவு வீட்டில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, வீட்டில் இருந்த 10ம் வகுப்பு படிக்கும் சிறுவன் மீது சந்தேகமடைந்த நிலையில் நேற்று போலீசார் சிறுவனிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் உடலுறவு கொள்ள முயற்சித்ததும், அந்த பெண் மறுத்துள்ளார். இதனால், சிறுவன் அப்பெண்ணை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டான்.