பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ www.pocsoportal.tn.gov.in என்ற தளமும், கைம்பெண், ஆதரவற்ற மகளிர் நல வாரிய உறுப்பினர் சேர்கைக்கான www.tnwidowwelfareboard.tn.gov.in ஆகிய இணையதளங்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.
போக்சோ தளம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வழக்குகள் காவல்துறையால் பதிவு செய்யப்படுவது முதல் நீதிமன்ற தீர்ப்பு வரை அலுவலர்கள் கண்காணித்து வழக்கை விரைவுப்படுத்த உதவும்.