பெண்களுக்கு எதிரான குற்றத்தைத்தடுக்க, புதிய குற்றவியல் சட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளதாக, மத்திய அமைச்சர் அமித்ஷா சுட்டிக்காட்டியுள்ளார். இதன் மூலம் பெண்களை குற்றங்களில் இருந்து காப்பற்ற முடியும் என்றும், விசாரணை நடைமுறைகளை இணையவழியில் மேற்கொள்ளலாம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். கூட்டுப்பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு 20 ஆண்டு சிறை விதிக்க வழிவகுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.