பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் பதவியை ஏற்க ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மாநில நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்த நிலையில் தற்போதுள்ள சூழலில் கட்சி பதவியை ஏற்க விருப்பமில்லை என்று பொற்கொடி கூறிவிட்டதாக கூறப்படுகிறது. பிஎஸ்பி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்க் சென்னை பெரம்பூரில் ஜுலை 5ஆம் தேதி அவரது வீட்டின் அருகே படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. விரைவில் கட்சியின் தலைவரை மாயாவதி அறிவிப்பார்.