கேரள மாநிலத்திற்கு தமிழக அரசு சார்பில், ₹5 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தமிழக அரசு ₹5 கோடி அறிவித்தது. அதைத் தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, ₹5 கோடிக்கான காசோலையை அவரிடம் வழங்கினார்.