பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் வழங்கி, பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரஜ்வாலின் காவல் நிறைவடைந்த நிலையில், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். முன்னதாக, மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், போலீஸ் காவலை நீட்டிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.