மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசும்போது எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததற்கான காரணத்தை மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் அரசியலமைப்பை எதிர்ப்பதாக பிரதமர் பேசியதாகவும், அவரின் இயல்பே பொய் சொல்வதும், மக்களை திசைதிருப்புவதும்தான் என்றும் கார்கே விமர்சித்துள்ளார். மேலும், அரசியலமைப்பு சாசனம் உருவாக்கப்பட்டபோது அம்பேத்கர் உருவ பொம்மையை எரித்தவர்கள் தான் அவர்கள் எனவும் பேசியுள்ளார்.