முதன்முதலில் சொந்த வீடு கட்டுவோர் அல்லது வாங்குவோருக்கு மத்திய அரசின் பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் ₹2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பத்தை வீட்டுக்கடன் அளிக்கும் வங்கியிடம் பெற்று உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து நேரில் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பத்தை பெற்று, மத்திய அரசிடம் இருந்து மானியம் பெறும் வங்கி, கடன் பெற்றோரின் கணக்கில் அத்தொகையை வரவு வைக்கும்.