விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. முன்னதாக ‘LIC’ என்று சூட்டிய பெயரை LIK (Love Insurance Kompany) என மாற்றி, இன்று ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் நயன்தாரா அறிவித்திருந்தார். இதில் எஸ்ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.