நடிகரும் டி-சீரிஸ் தயாரிப்பாளருமான கிரிஷன் குமார் மகள் திஷா இன்று காலமானார். அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், நீண்ட நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த திஷா ஜெர்மனியில் புற்றுநோய்க்கான சிகிச்சையில் இருந்தபோது உயிரிழந்ததாக கூறியுள்ளார். கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான அனிமல் படத்தின் முதல் காட்சியில் காணப்பட்ட அவர் அதன் பிறகு வெளி உலகிலிருந்து விலகிவிட்டார். 21 வயதாகும் இவர் புற்றுநோயால் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.