பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான அரோமா மணி திருவனந்தபுரத்தில் காலமானார். 84 வயதாகும் இவர் தமிழில் விக்ரம் நடித்த காசி, முரளி நடித்த உன்னுடன், பிரபு நடித்த அரங்கேற்ற வேளை ஆகிய படங்களை இவர் தயாரித்துள்ளார். இதோடு மலையாளத்தில் 60க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தும் ஏழு படங்களை இயக்கியும் உள்ளார். இவருடைய மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.