பிரபல யூடியூபர் துருவ் ரதிக்கு டெல்லி நீதிமன்றம் இன்று சம்மன் அனுப்பியுள்ளது. அவர் மீது பாஜக மும்பை செய்தி தொடர்பாளர் சுரேஷ் கரன்ஷி நகுவா அவதூறு வழக்கு தொடர்ந்தார். ரூ.20 லட்சம் இழப்பீடு கோரப்பட்டுள்ளது. துருவ் ரதி தனக்கு எதிராக ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகவும், சமூக வலைதளங்களில் தன்னை மோசமாக ட்ரோல் செய்ததாகவும் புகார் அளித்திருந்தார். வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.