செங்கல்பட்டு அருகே பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சத்யாவை போலீசார் சுட்டு பிடித்தனர். விசாரணைக்காக அழைத்தபோது அவர் மறுப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல் காவலர்களையும் தாக்க முயன்றார். அப்போது தற்காப்புக்காக போலீசார் அவரை சுட்டதில் காலில் குண்டு பாய்ந்ததால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.