இயக்குநர், நடிகர், நடன இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா, விஜய்யுடன் ‘தி கோட்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும், பேட்ட ராப், மூன் வாக் உள்ளிட்ட படங்களில் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், ஜே.எம்.ராஜா இயக்கத்தில் அவர் நடித்து வரும் ‘சிங்காநல்லூர் சிக்னல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.