பிரான்ஸ் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், இடதுசாரி புதிய பாப்புலர் ஃப்ரண்ட் (NPF)பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துதல், ஓய்வூதிய வயதை 60 ஆக குறைத்தல், பணக்காரர்களுக்கு 90% வரி என தனது திட்டத்தை அறிவித்துள்ளது. அதிக இடங்களை வென்றிருந்தாலும், ஆட்சியமைக்க தேவையான 289 இடங்களை அக்கட்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.