நடிகை பிரியங்கா சோப்ரா கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ள நிகழ்வு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக தனது இன்ஸ்டா ஸ்டேட்டஸில் ஒரு புகைப்படத்தை அவர் பகிர்ந்து உள்ளார். அதில், எனது வேலையில் உள்ள தொழில் முறை ஆபத்து என்ற கருத்துடன், கழுத்தில் வெட்டு காயத்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் விரைவில் அவர் குணமடைய வேண்டும் என ஆறுதல் கூறி வருகிறார்கள்.