திமுக ஆட்சியில் தேச விரோத, பிரிவினைவாத கும்பல்களின் செயல்பாடு அதிகரித்து வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்ட சாலைகளில் நீட் எதிர்ப்பு என்ற போர்வையில் பிரிவினை கருத்து எழுதப்பட்டுள்ளதாக விமர்சித்த அவர், இதுபோன்ற பிரிவினைவாதிகளை திமுக அரசு ஆரம்பத்திலேயே தடுத்தி நிறுத்தி, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்