ராயன் திரைப்படத்தை வெற்றி பெற வைத்த ரசிகர்களுக்கு நன்றி என்று நடிகரும், இயக்குநருமான தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த வெற்றி தனக்கு கிடைத்த மிகச்சிறந்த ‘பிளாக்பஸ்டர்’ பிறந்தநாள் பரிசு என்று குறிப்பிட்டுள்ள அவர், திரைப்படத்துறையினர், நண்பர்கள், பத்திரிகை மற்றும் ஊடகம், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், ஓம் நமச்சிவாய என குறிப்பிட்டுள்ளார். முடிவில், அவரது பாணியில் அன்புடன், D என்று அவர் பதிவிட்டுள்ளார்.