சென்னை தாம்பரம் அடுத்துள்ள திருநீர்மலை பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் நேற்று) இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து, 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்தனர். 4 மணிநேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.