குஜராத் மாநிலம் சூரத்தில் கடந்த ஜூலை 2 ஆம் தேதி திண்டோலி பகுதியில் 6 வயது சிறுமியை 37 வயது நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பிஸ்கட் தருவதாக கூறி சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி நீண்ட நேரமாக வீட்டிற்கு வராததால் பெற்றோர் தேடியபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்ததையடுத்து, சல்மான் கோஸ்வாமி என்ற சுரேஷ் (37) கைது செய்யப்பட்டார்.