பிஹாரில் சிவன் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த 42 ஆண்டுகள் பழமையான பாலம் நேற்று இடிந்து விழுந்தது. இது பல கிராமங்களை இணைக்கும் பாலம் என்பதால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். சிவன் மாவட்டத்தில் மட்டும் கடந்த 2 வாரங்களில் 14 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆய்வு நடத்த பிஹார் அரசு குழு அமைத்துள்ளது.