‘ஜெயம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகி அந்நியன், திருப்பதி உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சதா. விலங்குகள் நல ஆர்வலரான இவர் தற்போது வைல்டு லைஃப் புகைப்படக்காரராக புது அவதாரம் எடுத்திருக்கிறார். ராய்பூரில் உள்ள ரதன்பூர் புலிகள் ரிசர்வ் காட்டுப்பகுதிக்குச் சென்று புலிகளை விதவிதமாக ஷூட் செய்த அவர், அவற்றை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு எல்லோரையும் பிரமிப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.